search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி மாறன்"

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் வடசென்னை பிரபலம் இணைந்திருக்கிறார். #Asuran #Dhanush #VetriMaaran
    `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

    மேலும் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் ‘அசுரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். #Asuran #Dhanush #VetriMaaran
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Asuran #Dhanush #VetriMaaran
    `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    தற்போது இவரின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் பாலாஜி சக்திவேல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாலாஜி சக்திவேலுடன் நடிகர் பசுபதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் நிற்கிறார்கள்.



    தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 
    தனுஷ் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘அசுரன்’ படத்திற்காக புதிய கெட்-அப்பில் மாறி இருக்கிறார். #Dhanush #Asuran
    தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.



    தற்போது இப்படத்தின் கெட்-அப்புக்கு மாறி இருக்கிறார் தனுஷ். மேலும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கினார் #CIFF #ChennaiInternationalFilmFestival
    சென்னையில் 16-வது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

    இந்தோசினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்து கொண்டு சிறந்த படங்களுக்கு பரிசுகளை அளித்தார்.

    சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ராட்சசன்’, ‘வட சென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது.



    ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.

    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படமும் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

    ‘வட சென்னை’ படத்தின் இயக்கத்துக்காவும், ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

    இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது. #CIFF #ChennaiInternationalFilmFestival #PariyerumPerumal #96The Movie

    வழக்கு எண் 18/9, திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் தயாரிக்கும் படத்தில் மனீஷா யாதவ் நடிக்க இருக்கிறார். #ManishaYadav
    கிராமப்புற வேடங்களுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே உள்ளனர். அவர்களில் மனீஷா யாதவுக்கு முக்கிய இடம் உள்ளது. வழக்கு எண் 18/9 மூலம் அறிமுகமானவர் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டினார். 

    சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இரு படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ‘திருநாள்’ படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். துப்பறியும் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக மனீஷா நடிக்கிறார். 



    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதுதவிர அறிமுக இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் ‘சண்டா முனி’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹாரர் காமெடியில் தயாராகும் இந்தப் படத்தில் நட்ராஜ், யோகி பாபு ஆகியோருடன் மனீஷா நடிக்கிறார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் டீசரை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அதை பாராட்டி ட்விட் செய்திருக்கிறார். #Dhanush #VadaChennai
    ‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் முதல் பாகத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று டிரெண்டிங்கானது. தற்போது இந்த டீசரை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ‘என்னுடைய நண்பர் பன்முகம் கொண்ட நடிகர் தனுஷின் ‘வடசென்னை’ டீசர் பார்த்தேன். மிகவும் படபடப்பாகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

    சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.



    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.
    காலா படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிக்காக பிரபல இயக்குனர்கள் இரண்டு பேர் படம் இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். #Kaala #Rajinikanth
    ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. காலா பட வெளியீட்டுக்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கும் சென்றுவிட்டார் ரஜினி.

    அரசியலில் வேகம் எடுத்த ரஜினி அதை அப்படியே விட்டுவிட்டு படப்பிடிப்புக்கு சென்றது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அடுத்து இன்னும் 2 படங்களில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

    இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரிடமும் கதை கேட்டு காத்திருக்க சொல்லி இருக்கிறார் ரஜினி. வெற்றிமாறன் கூறிய கதை வடசென்னையை மையப்படுத்திய ஒரு கல்ட் கதை.



    முருகதாஸ் கூறியது அரசியல் கதை. முதலில் முருகதாஸ் இயக்கத்திலும் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்திலும் நடிக்க திட்டமிட்டு உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் திரும்பும் ரஜினி சில நாட்கள் கட்சி பணிகளை கவனித்துவிட்டு பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளது.
    ×